Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திமுகவின் வெற்றியே அவரால்தான் – ஸ்டாலினை நெருக்கும் குடும்பம் ?

திமுகவின் வெற்றியே அவரால்தான்  – ஸ்டாலினை நெருக்கும் குடும்பம் ?
, வியாழன், 30 மே 2019 (09:24 IST)
ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சியின் இளைஞரணி செயலாளர் பதவியை வழங்க வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலினை அவரது குடும்பத்தினர் அழுத்தம் கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு அதிமுக வெறுப்பு, பாஜக வெறுப்பு, மோடி எதிர்ப்பு அலை எனப் பல காரணங்கள் அரசியல் விமர்சகர்களால் சொல்லப்படுகின்றன. ஆனால் திமுக வில் உள்ள சிலரோ இந்த வெற்றிக்கு உதயநிதியின் தேர்தல் பிரச்சாரம் தான் காரணம் என சொல்லி வருகின்றனர்.

இதனால் கடந்த சில நாட்களாகவே தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய உதயநிதிக்கு திமுகவின் இளைஞரணி செயலாளர் பதவியை வழங்க வேண்டுமென வற்புறுத்தி வருகின்றனர். ஆனால் ஸ்டாலினோ ஏற்கனவே சொல்லப்பட்டு வரும் குடும்பக் கட்சி எனும் விமர்சனத்தை மனதில் வைத்து அதற்கு தடை போட்டு வந்தார்.

ஆனால் விடாத சில தொண்டர்கள் சமூக வலைதளங்களில் உதய்க்கு பதவி வழங்க வேண்டுமென பதிவுகளை பரப்பி வருகின்றனர். கட்சியில் உதய்க்கு நெருக்கமானவர்களான அன்பில் மகேஷ் மற்றும் உதய்யின் தாயார் துர்கா ஸ்டாலின் மற்றும் மைத்துனர் சபரீசன் போன்றவர்கள் இது குறித்து ஸ்டாலினுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்த வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் விரைவில் உதய்க்கு கட்சியில் முக்கியமானப் பொறுப்புகள் வழங்கும் அறிவிப்புகள் வரலாம் என்கிறது திமுக வட்டாரம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நேசமணி மட்டும் மஞ்சள் டர்பன் அணிந்திருந்தால் – ஹர்பஜன் சிங் கலக்கல் ட்வீட் !