Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காலியாகிறது அமமுக கூடாரம்: அதிமுகவுக்கு தாவும் முக்கிய தலைகள்

காலியாகிறது அமமுக கூடாரம்: அதிமுகவுக்கு தாவும் முக்கிய தலைகள்
, வியாழன், 30 மே 2019 (07:24 IST)
உண்மையான அதிமுக நாங்கள் தான், எங்களிடம் ஸ்லீப்பர்செல்கள் உள்ளனர், அதிமுகவை கைப்பற்றுவோம் என வீராவேசமாக பேசி வந்த தினகரன், நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்ததில் இருந்து அவரது செல்வாக்கின் உண்மை நிலை தெரிய வந்துள்ளது. இதனையடுத்து ஸ்லீப்பர்செல்லும் இல்லை, செல்வாக்கும் இல்லை என்பது உறுதியாகியுள்ளதால் அமமுக கூடாரம் காலியாகவுள்ளதாக கூறப்படுகிறது
 
இதனை ஒரு வருடத்திற்கு முன்பே கணித்த செந்தில்பாலாஜி, திமுகவுக்கு சென்று இன்று அரவக்குறிச்சி தொகுதியின் எம்.எல்.ஏவும் ஆகிவிட்டார். அடுத்து திமுக ஆட்சி அமைந்தால் அவருக்கு அமைச்சர் பதவியும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனவே தாமதம் ஆனாலும் பரவாயில்லை செந்தில்பாலாஜியை போல் நாமும் அரசியலில் செட்டில் ஆக வேண்டும் என்றால் இனியும் அமமுகவை நம்பி பிரயோஜனமில்லை என்ற முடிவுக்கு அமமுகவின் முக்கிய தலைகள் வந்துவிட்டதாக கூறப்படுகிறது
 
தினகரனை நம்பி பதவியை இழந்தது மட்டுமின்றி சம்பாதித்த சொத்திலும் பெரும்பகுதியை இழந்ததால் இனியும் அக்கட்சியில் இருப்பது வேஸ்ட் என தங்கதமிழ்ச்செல்வன், வெற்றிவேல், புகழேந்தி ஆகியோர் அதிமுகவில் இணைய முடிவெடுத்துவிட்டதாகவும், இதுகுறித்து துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் மூவரும் அதிமுகவுக்கு செல்வது உறுதியாகிவிட்டால் அமமுக கலைக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே கூறப்படுகிறது. 
 
ஜெயலலிதா, கருணாநிதி போன்ற ஆளுமையுள்ள தலைவர்கள் இல்லையென்றாலும் இப்போதைக்கு அதிமுக, திமுகவை தவிர வேறு கட்சிகள் ஆட்சியை பிடிக்க வழியே இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மையாக உள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேவையா இந்த அவமானம்! ஐ.ஆர்.சி.டி.சியில் புகார் அளித்து பல்பு வாங்கிய வாடிக்கையாளர்!