இதை செய்தால் கொரோனா வைரஸிடம் இருந்து தப்பிக்கலாம்! நடிகர் பார்த்திபன் சொல்வது உண்மையா?

Webdunia
புதன், 29 ஜனவரி 2020 (15:40 IST)
கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க சில ஆயுர்வேத முறைகள் மற்றும் சித்தா முறைகளை நடிகர் பார்த்திபன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சீனாவில் 100க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிவாங்கி இருக்கும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க நடிகர் பார்த்திபன் சில ஆயுர்வேத தடுப்பு முறைகளைப் பற்றி விளக்கியுள்ளார்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவ தொடங்கியிருப்பதால், ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள முன்னெச்சரிக்கைகள் மூலம் விஷ காய்ச்சலிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்வது எப்படி?
1. வெறும் வயிற்றில் நிலவேம்பு கஷாயம் குடிக்கலாம்.
2. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கிலோய் (அம்ருதா / குடூச்சி/ சீந்தில்கொடி) கஷாயம் உட்கொள்ளலாம்.
3. ஐந்து கருமிளகை நன்றாக மென்று உட்கொள்ளலாம்.
4. கிருஷ்ண துளசி (கரு துளசி) சாறு வடிவத்தில் அல்லது மாத்திரை வடிவில் வெறும் வயிற்றில் இரண்டு முறை தனியாகவோ அல்லது மேற்குறிப்பிட்ட அனைத்துடன் ஒன்றாகவோ எடுத்துக்கொள்ளலாம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸூக்காக எந்த ஒரு சிறப்பு மருந்தும் இல்லை என சொல்லபப்டும் நிலையில் பார்த்திபன் அறிவித்துள்ள இந்த முறைகள் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மரியாதையா ட்ரீட் பண்ணா பேச்சுவார்த்தை ரெடி!.. இறங்கி வரும் ஈரான்!..

பயிர்க்கடன் ரத்து!. தஞ்சாவுர் கூட்டத்தில் விஜய் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள்!..

விஜயின் வாகனத்தை பின் தொடர்ந்தவர் விபத்தில் பலி?.. இதுக்கு இல்லையா எண்டு!...

ஒரே நாளில் 25 லட்சம் பயனர்கள் சாட்ஜிபிடியில் இருந்து திடீரென வெளியேற்றம்.. என்ன காரணம்?

ஈரான் போருக்காக ரூ. 83 லட்சம் கோடி செலவு செய்யும் டிரம்ப்.. வரி செலுத்தும் மக்கள் அதிருப்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments