Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அர்னாப் கோஸ்வாமியிடம் கேள்வி எழுப்பிய நடிகர் ! பறக்க 6 மாதம் தடை !

Webdunia
புதன், 29 ஜனவரி 2020 (15:12 IST)
பிரபல தொலைக்காட்சி செய்தியாளர் அர்னாப் கோசாமியிடம் கேள்வி எழுப்பிய குனால் கம்ரா என்ற நடிகருக்கு விமானத்தில் செல்ல 6 மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாஜக ஆதரவாளராக அறியப்படும் ரிபப்ளிக் தொலைக்காட்சி அர்னாப் கோசாமியிடம் பாலிவுட் நடிகர் குனால் கம்ரா என்பவர் தன்னுடைய விமானப் பயணத்தின் போது சில கேள்விகளைக் கேட்டு அதை வீடியோவாக எடுத்து பதிவேற்றி இருந்தார்.

அந்த வீடியோவில் ரோஹித் வெமுலா பற்றி கேள்வி எழுப்பிய குனால் அவர் எழுதிய 10 பக்க கவிதையை படியுங்கள் உங்களுக்கு இதயம் இருந்தால் எனவும் நீங்கள் தேசியவாதியா அல்லது கோழையா? சொல்லுங்கள் பார்வையாளர்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள் எனக் கூறி அவரைக் கேள்விகளால் துளைக்கிறார். அவரின் எந்த கேள்விகளுக்கும் பதிலளிக்காமல் அர்னாப் கோசாமி அமைதியாக இருக்கிறார்.

நேற்று வெளியான இந்த வீடியோ சைரல் ஆக,இன்று இண்டிகோ விமான நிறுவனம் குனால் கம்ரா விமான விதிமுறைகளை மீறி நடந்துகொண்டதால் அவர் இன்னும் 6 மாதத்துக்கு தங்கள் விமானங்களில் பறக்க தடை விதிப்பதாக அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோழியா? முட்டையா? எது முதலில் வந்தது? - புதிருக்கு விடை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!

யூட்யூபை பார்த்து தன் வயிற்றை தானே கிழித்து ஆபரேஷன் செய்த நபர்! - அதிர்ச்சி சம்பவம்!

நாளை தொகுதி மறுசீரமைப்பு கூட்டம்! இன்றே சென்னை வந்த கேரள முதல்வர் பினராயி விஜயன்! - பரபரப்பாகும் அரசியல் களம்!

சோதனை ஓட்டம் வெற்றி! டிசம்பரில் வருகிறது புதிய மெட்ரோ ரயில் சேவை! - சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

அடுத்த கட்டுரையில்
Show comments