Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா பிசாசை வீழ்த்துவோம்: டிராகன் தேசத்தில் நடப்பது என்ன?

Advertiesment
கொரோனா பிசாசை வீழ்த்துவோம்: டிராகன் தேசத்தில் நடப்பது என்ன?
, புதன், 29 ஜனவரி 2020 (14:59 IST)
சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இதுவரை 132 பேர் பலியாகி உள்ளனர்.கொரோனா வைரஸை பிசாசு என வர்ணித்துள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங்.
 
கொரோனா வைரஸ் தாக்கியதில் இருந்து டிராகன் தேசமான சீனாவில் என்னென்ன நடந்துள்ளது என்ற தொகுப்பு இதோ... 
 
1. கொரோனா வைரஸால் சீனாவில் இதுவரை 132 பேர் பலியாகி உள்ளனர் என சீன தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
2. ஸ்டார்பக்ஸ் நிறுவனம் சீனாவில் உள்ள தமது 2000 கிளைகளை மூடியுள்ளது.
3. சீனா சென்று வந்த ஏறத்தாழ 600 பேரை கிறிஸ்துமஸ் தீவில் இரண்டு வாரத்திற்குத் தனிமைப்படுத்தி வைத்துள்ளது ஆஸ்திரேலியா. இந்த தீவானது ஆஸ்திரேலியாவிலிருந்து 1200 மைல் தொலைவில் உள்ளது.
4. சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹான் நகரில் இருந்து 200 ஜப்பானியர்கள் நாடு திரும்பி உள்ளனர். இன்னும் 650 பேர் நாடு திரும்ப விருப்பம் விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களை அழைத்து வர சிறப்பு விமானத்தை அந்நாடு ஏற்பாடு செய்துள்ளது.
5. வந்தவர்களில் பலருக்கு மூச்சுத் திணறல் பிரச்சனை உள்ளதாகத் தெரிவித்துள்ள ஜப்பான் அரசாங்கம், சீனா சென்று திரும்பிய அனைவரும் பரிசோதிக்கப்படுவார்கள் என அறிவித்துள்ளது.
6. வுஹான் பகுதியில் உள்ள 200 பிரிட்டானியர்களை அழைத்துவர பிரிட்டன் ஏற்பாடு செய்துள்ளது.
7. அதுபோல 700 தென் கொரியர்களை அங்கிருந்து அழைத்து வர நான்கு சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்துள்ளது அந்த நாடு.
8. சீனா செல்ல தடை விதிக்க ஹாங்காங் திட்டமிட்டு வருகிறது.
9. இந்த வைரஸ் தொற்று உச்சத்தை தொட இன்னும் 10 நாட்கள் ஆகும் என்கிறது சீன சுகாதாரத் துறை.
10. சீனாவிலிருந்து 200 அமெரிக்கர்கள் நாடு திரும்பி உள்ளனர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடங்கொய்யால... எலிய உயிரோட திங்குறானே படுபாவி - "மாஸ்டர்" நடிகர் வெளியிட்ட வீடியோ!