17 வயது மகளை ரூ.1.5 லட்சத்துக்கு விற்பனை செய்த பெற்றோர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்
சென்னை அடுத்த தாம்பரம் என்ற பகுதியைச் சேர்ந்த பெற்றோர் தங்களது 17 வயது சிறுமியை ஏழாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு பின்னர் வீட்டிலேயே இருக்குமாறு கூறியுள்ளனர். பெற்றோரிடம் தான் படிக்க வேண்டும் என்று தனது விருப்பத்தை சிறுமி கூறிய போதிலும் அவர்கள் அதை கண்டு கொள்ளவில்லை.
இந்த நிலையில் ஆந்திராவை சேர்ந்த ஒருவருக்கு பெற்ற மகல் என்றும் பாராமல் ரூ.1.5 லட்சத்திற்கு பெற்றோர்கள் விற்பனை செய்ய முயற்சித்துள்ளனர். திருமணம் என்ற பெயரில் பணக்காரர் ஒருவர் சிறுமியை விலை பேசியது தெரியவந்தவுடன் அந்த சிறுமி தப்பித்து தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தகவல் தெரிவித்தார்
இதனை அடுத்து போலீசார் அந்த சிறுமியை குழந்தைகள் நல அலுவலர் உடன் சென்று விசாரித்த போது பெற்றோர்கள் உண்மையை ஒப்புக்கொண்டனர். இதனை அடுத்து வழக்கு பதிவு செய்து சிறுமியை போலீசார் காஞ்சிபுரத்தில் உள்ள காப்பகத்தில் சேர்த்து உள்ளனர்.
மேலும் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை செய்து வரும் நிலையில் சிறுமியை வாங்க முயற்சித்த ஆந்திர நபர் யார் என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது