Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மகனுக்கு இறுதி மரியாதை செய்யாத பெற்றோர் :நெஞ்சை உறைய வைக்கும் காரணம் !

Advertiesment
மகனுக்கு இறுதி மரியாதை செய்யாத பெற்றோர் :நெஞ்சை உறைய வைக்கும் காரணம் !
, சனி, 25 ஜனவரி 2020 (07:36 IST)
பரமக்குடியில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த மகனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு விட்டதால் அவருக்கு இறுதி சடங்கு செய்ய பெற்றோர்கள் மறுத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதிக்கு அருகில் உள்ள காந்திநகர் எனும் பகுதியைச் சேர்ந்த இளைஞர் சரத்குமார். இவர் தனியார் வங்கி ஒன்றில் வேலைப் பார்த்து வந்துள்ளார். கடந்த 11 ஆம் தேதி இவர் வேலையை முடித்துவிட்டு இரவில் வீட்டுக்குக் கிளம்பியுள்ளார். அப்போது அவரது வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஆனால் அருகில் ஆள்நடமாட்டம் இல்லாததால் அவருக்கு ஆம்புலன்ஸ் உதவிக் கிடைக்க வெகுநேரம் ஆகியுள்ளது. இதையடுத்து அவர் சிவகங்கை மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் போனதால் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளது. ஆனால் அவரது உடல் உறுப்புகள் நல்ல நிலையில் இருந்ததால் அவை பெற்றோர் சம்மதத்துடன் தானம் கொடுக்கப் பட்டுள்ளன. அவரின் உறுப்பை இப்போது 7 பேர் பெற்றுக் கொண்டுள்ளனர்.

அதனால் தங்கள் மகன் இன்னும் உயிரோடுதான் இருக்கிறான் என்று அவரது பெற்றோர் அவருக்கு இறுதி மரியாதை செலுத்த மறுத்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கட்டாயப்படுத்தி ஓரினச்சேர்க்கை ! புதுக்கோட்டையில் மனநலம் பாதிக்கப் பட்டவருக்கு நேர்ந்த கொடூரம் !