Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இறந்த மகனின் பிறந்தநாளன்று குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்ட பெற்றோர்

Advertiesment
இறந்த மகனின் பிறந்தநாளன்று குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்ட பெற்றோர்
, வெள்ளி, 19 அக்டோபர் 2018 (16:18 IST)
வேலூரில்  இறந்த மகனின் பிறந்தநாளன்று பெற்றோர் துக்கம் தாளாமல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அம்மணாங்குப்பத்தை சேர்தவர் திருவேங்கடம். இவரது மனைவி பரிமளா. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருந்த நிலையில், மூத்த மகன் சமீபத்தில் உடல் நிலை சரியில்லாமல் உயிரிழந்துபோனான்.
 
மகனின் பிரிவைத் தாங்காமல் பெற்றோர் மீளா துயரத்தில் இருந்து வந்துள்ளனர்.
 
இந்நிலையில் நேற்று இறந்த மகனின் பிறந்தநாளையொட்டி, திருவேங்கடம், முதியோர் இல்லத்திற்கு உணவு வழங்கிவிட்டு வந்துள்ளார். பின்னர் மகன் இல்லாத உலகத்தில் இனியும் வாழ முடியாது என நினைத்து திருவேங்கடம், அவரது மனைவி பரிமளா, இளைய மகன் மாதேஷ் ஆகிய மூவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கஞ்சா அடித்துவிட்டு திருடும் இளைஞர்...போலீஸிடம் சிக்கினான்...