தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் மற்றும் ஏழை எளிய நடுத்தர மக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர்
பெட்ரோல் விலை இன்று 27 காசுகள் உயர்ந்து 91.98 ரூபாய் ஆகவும், டீசல் விலை இன்று 32 காசுகள் உயர்ந்து என்பது 85.31 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக பார்சல் லாரி வாடகை இன்று முதல் 25 சதவீதம் உயர்த்தப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட புதிய வாடகை இன்று முதல் அமல்படுத்தபடுவதாகவும் பார்சல் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது
லாரி வாடகை உயர்வதன் காரணமாக காய்கறி உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை வெகுவாக உயரும் என்று அஞ்சப்படுகிறது