Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேர்தல் நேரத்தில் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு.. திமுகவுக்கு பின்னடைவா?

தேர்தல் நேரத்தில் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு.. திமுகவுக்கு பின்னடைவா?

Siva

, வியாழன், 29 பிப்ரவரி 2024 (08:58 IST)
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி விவசாய பெருமக்கள் ஒரு ஆண்டுக்கு மேலாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் தமிழக அரசு பரந்தூர் விமான நிலையத்திற்கான நிலம் எடுப்பதற்கான அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து அது குறித்து அரசு ஆணையும் வெளியிட்டுள்ளது. இது திமுகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்கள் மற்றும் அதன் விளைநிலங்களையும் சேர்த்து சுமார் 4,563 ஏக்கர் நிலம் கையகப்படுத்த தமிழ்நாடு அரசு முடிவெடுத்திருக்கிறது.  நிலம் எடுப்பதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் விமான நிலைய நில அளவெடுப்பு அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதோடு கைது செய்யப்பட்டனர்

மேலும் கைது செய்யப்பட்ட விவசாயிகள் மட்டும் பொதுமக்கள் 137 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அந்த பகுதி மக்கள் திமுகவின் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது

திமுகவின் கூட்டணி கட்சிகள் தற்போது திமுகவுடன் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை நடத்தி சீட்டு வாங்கும் கவனத்தில் இருப்பதால் இந்த கைது நடவடிக்கை கண்டு கொள்ளவில்லை.

இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் திமுக தேவையில்லாமல் இந்த பணியை செய்து வருவதாக கூட்டணி கட்சி தலைவர்களே புலம்பி வருவதாகவும் திமுகவினர்கள் கூட தேர்தலுக்கு பின்னர் இந்த வேலையை பார்த்திருக்கலாம் என்றும் கூறி வருகின்றனர்

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வடமாநில ரயில்கள் கோவை வராமல் கேரளா செல்லும்: ரயில்வே துறை அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு..!