Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வடமாநில ரயில்கள் கோவை வராமல் கேரளா செல்லும்: ரயில்வே துறை அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு..!

Train

Siva

, வியாழன், 29 பிப்ரவரி 2024 (08:49 IST)
வடமாநிலங்களில் இருந்து வரும் 6 ரயில்கள் கோவை மத்திய ரயில் நிலையம் வராமல் கேரளாவிற்கு செல்லும் என்ற ரயில்வே துறையின் அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

கோவை வழியாக இயக்கப்படும் 6 ரயில்கள் இனி கோவை மத்திய ரயில் நிலையத்திற்கு வராமல் கேரளா செல்வதற்கான பரிந்துரையால் பயணிகள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக தென்னக ரயில்வேக்கு அதிக வருவாய் தரும் ரயில் நிலையமாக கோவை மத்திய ரயில் நிலையம் உள்ள நிலையில் கோவை வராமல் கேரளாவுக்கு செல்லும் என்ற அறிவிப்புக்கு பயணிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரயில்வே துறையை கண்டித்து கோவை ரயில் நிலையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர் பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டறிக்கைகளை வழங்கினர். தொடர்ந்து கோவை - நாகர்கோவில் ரயிலில் பயணித்தவாறு பயணிகளுக்கு துண்டறிக்கைகளை வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்த வால்ட் டிஸ்னி நிறுவனம்! – 11 ஆயிரம் கோடி முதலீட்டில் புதிய ப்ளான்!