என்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டார்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை மீது தொழிலதிபர் புகார்..!

Mahendran
திங்கள், 16 ஜூன் 2025 (16:52 IST)
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரின் மூலம் பரவலாக அறியப்பட்ட நடிகை ரிஹானா பேகம் மீது, சென்னையை சேர்ந்த ஒரு தொழிலதிபர் திருமண மோசடி புகார் அளித்துள்ளார். பூந்தமல்லி காவல் நிலையத்தில் ராஜ் கண்ணன் என்பவர் இந்த புகாரை பதிவு செய்திருப்பது சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
 
தொழிலதிபர் ராஜ் கண்ணன் அளித்த புகாரில், ரிஹானாவுக்கு ஏற்கனவே ஹிஸ்புல்லா என்பவருடன் திருமணம் நடந்ததாகவும், அவரை விவாகரத்து செய்துவிட்டதாக தன்னிடம் கூறி, தன்னை ஏமாற்றித் திருமணம் செய்து கொண்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இந்து முறைப்படி நடந்த இந்த திருமணத்திற்குப் பிறகு, அடகு வைத்த நகைகளை மீட்பது, தினசரி செலவுகள் என பல லட்சங்களை ரிஹானா தன்னிடம் இருந்து பெற்றதாகவும், இதுவரை மொத்தம் 18.5 லட்சம் ரூபாய் கொடுத்திருப்பதாகவும் ராஜ் கண்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
 
பின்னர் ராஜ் கண்ணன் விசாரித்தபோதுதான், ரிஹானா தனது முதல் கணவரான ஹிஸ்புல்லாவை விவாகரத்து செய்யவில்லை என்பது தெரியவந்ததாக புகாரில் கூறியுள்ளார். தன்னை ஏமாற்றித் திருமணம் செய்துகொண்ட ரிஹானா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரிஹானா, சின்னத்திரை நடிகைகளின் பல பிரச்னைகளுக்குக் குரல் கொடுத்துள்ள நிலையில், அவர் மீதே இதுபோன்ற ஒரு புகார் எழுந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI அனைத்து வேலைகளையும் செய்யும், இனிமேல் மனிதர்களுக்கு சுதந்திரம் தான்! எலான் மஸ்க்:

செம்பரப்பாக்கம் ஏரியை திறக்க என்னை ஏன் கூப்பிடவில்லை: செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

டெல்லி தாஜ் ஹோட்டலில் சர்ச்சை: 'பத்மாசனம்' போட்டு அமர்ந்த பெண்ணுக்கு அவமதிப்பு?

காலையில் குறைந்த தங்கம் மாலையில் மீண்டும் குறைவு.. இன்று ஒரே நாளில் ரூ.3680 சரிவு..!

இன்றிரவு சென்னை உள்பட 26 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்