தமிழக கடற்கரை ஓர பகுதிகளில் அவ்வப்போது திடீரென கடல் உள்வாங்கி வரும் வருவதை பார்த்து வருகிறோம். குறிப்பாக தூத்துக்குடி திருச்செந்தூர் கடல் அவ்வப்போது உள்வாங்கும் என்றும் அப்போது அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் அச்சப்படுகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் தற்போது வந்த தகவல் படி பாம்பன் பகுதியில் திடீரென 200 மீட்டர் தூரத்திற்கு கடல் நீர் உள்வாங்கிதாகவும் இதனால் அந்த பகுதி மீனவர்கள் அச்சமடைந்ததாகவும் கூறப்படுகிறது
கடல் நீர் உள்வாங்கியதால் நாட்டுப் படகுகள் தரைதட்டி இருக்கும் விலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சியாளர்கள் இது குறித்து தெரிவித்த போது காலநிலை மாற்றம் காரணமாக கடல் நீர் உள்வாங்கி இருக்கலாம் என்றும் ஒரு சில நிமிடங்களில் கடல் நீர் இயல்பு நிலை திரும்பும் என்றும் எனவே மீனவர்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்
இருப்பினும் அந்த பகுதியில் உள்ள மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடல் நீர் உள்வாங்கியதை அச்சத்துடனே பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..