10,11,12ம் வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்புகள்! – பள்ளிக்கல்வித்துறை தகவல்!

Webdunia
ஞாயிறு, 16 ஜனவரி 2022 (15:20 IST)
தமிழகத்தில் 10 முதல் 12ம் வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகமாக இருந்து வரும் நிலையில் 1 முதல் 9 வகுப்புகளை தொடர்ந்து தற்போது 10 முதல் 12 வகுப்புகள் வரையிலும் ஜனவரி 31 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 19ம் தேதி திருப்புதல் தேர்வு தொடங்கும் என கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்காமல் இருக்க 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு ஆன்லைன் மூலமாகவும், அரசு பள்ளிகளுக்கு கல்வி தொலைகாட்சி மூலமாகவும் பாடங்களை நடத்த திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வீட்ல ஒத்த பைசா இல்ல.. இவ்ளோ சிசிடிவி கேமரா!. எழுதி வைத்துவிட்டு போன திருடன்!...

விஜய் அரசியலுக்கு வந்தது பணம் சம்பாதிக்கவே.. எனது கட்சியை தமாகா உடன் இணைக்கவுள்ளேன்: தமிழருவி மணியன்..!

ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பால் பரபரப்பு..!

மலாக்கா ஜலசந்தியில் வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம் தகவல்

இன்று 16 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments