தமிழக பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் முடிந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகளுக்கு புதிய உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் கடந்த வாரம் தொடங்கி அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் நடைபெற்றது. இன்றுடன் தேர்வுகள் முடிவடையும் நிலையில், நாளை முதல் ஜனவரி 1 வரை மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சில பள்ளிகள் விடுமுறை காலத்திலும் சிறப்பு வகுப்புகள் நடத்த திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கும் புதிய உத்தரவை வெளியிட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை, விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும், மாணவர்கள் கிறிஸ்துமஸ், புத்தாண்டை கொண்டாட அனுமதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.