Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் பிடிஆர் தாயார் நியமனம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் பிடிஆர் தாயார் நியமனம்
, புதன், 8 நவம்பர் 2023 (18:25 IST)
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர்களில் ஒருவராக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களின் தாயார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் தக்காராக பணிபுரிந்த கண்ணன் என்பவர் கடந்த மே மாதம் உயிரிழந்ததை அடுத்து  புதிய தக்கார் நியமனம் செய்யப்பட்டு சமீபத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில்  தக்கார் பதவியை பிடிக்க பலர் முயற்சி செய்த நிலையில்  க.செல்லத்துரை அவர்களுக்கு அந்த பதவி கிடைத்தது. இந்த நிலையில் தற்போது  அறங்காவலர் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  

இந்த குழுவில் துரை சொக்கிகுளம் வல்லபாய் ரோடு சுப்பராயன் என்பவரின் மகள் ருக்மணி பழனிவேல்ராஜன் , மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த பி.கே.எம்.செல்லையா, மதுரை காந்தி நகர் சூமேக்கர் தெருவைச் சேர்ந்த சி.கிருஷ்ணன் மகள் டி.சுப்புலெட்சுமி, மதுரை கே.கே.நகர் ஏரிக்கரைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த மு.சீனிவாசன், மதுரை அரசரடி ஹார்விநகர் 4வது தெருவைச் சேர்ந்த எம்.சேகர் என்பவரின் மகள் எஸ்.மீனா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த குழுவில் உள்ள ருக்மணி பழனிவேல்ராஜன், அமைச்சர் பிடிஆர் அவர்களின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கே.சி. பழனிசாமி அதிமுகவில் இருந்து நீக்கம்: ஈபிஎஸ்-க்கு சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு..!