மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று நவராத்திரி விழா தொடங்குவதை அடுத்து பக்தர்கள் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு குவிந்து வருகின்றனர் 
 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படும் என்பதும் பக்தர்கள் அதிகமாக மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தருவார்கள் என்றும் குறிப்பிடத்தக்கது. 
	 
	அந்த வகையில் இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவ திருவிழா தொடங்கியுள்ளது. இந்த விழா அக்டோபர் 24ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
	 
	திருவிழா நடைபெறும் அனைத்து நாட்களிலும் கோயிலில் உள்ள திருக்கல்யாணம் மண்டபத்தில் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை ஆன்மீக சொற்பொழிவு, பரதநாட்டியம், வீணை கச்சேரி, கர்நாடக சங்கீதம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் ஏராளமான பக்தர்கள் வருகை தர அழைப்பு விடுத்தப்பட்டுள்ளதாகவும் தேவஸ்தானம் சார்பில் தெரிவித்துள்ளது.