மக்களை குழப்ப முயற்சிக்கிறார் தினகரன்: முதல்வர் பழனிச்சாமி

Webdunia
புதன், 11 ஏப்ரல் 2018 (17:51 IST)
டிடிவி தினகரன் அதிமுக கட்சியின் கொடி போலவே அவரது அணியின் கொடியையும் வடிவமைத்து மக்களை குழப்ப முயற்சிக்கிறார் என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்
 
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஒ.பி.எஸ் ஆகியோருக்கு எதிராக தினகரன்  அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அணியை தொடங்கினார். மேலும், கருப்பு வெள்ளை சிவப்பு நிற கொடியில் ஜெயலலிதாவின் உருவம் இருப்பது போன்ற அணியின் கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார்.
 
தினகரன் கட்சிக் கொடியில் ஜெயலலிதாவின் படம் உள்ளதாலும், அதிமுக கட்சி கொடி போலவே இருப்பதாலும் வழக்கு தொடரப்பட்டது.
 
இந்நிலையில், இன்று இந்த வழக்கு தொடர்பாக முதல்வர் பழனிச்சாமி தரப்பில் விளக்கமனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தினகரன் ஜெயலலிதாவின் வாரிசு என காட்டிக்கொள்ள அவரது கொடியில் ஜெ.வின் படத்தை பயன்படுத்தியுள்ளார். மேலும், அதிமுக கட்சியின் கொடி போலவே அவரது அணியின் கொடியையும் வடிவமைத்து மக்களை குழப்ப முயற்சிக்கிறார் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முயல்வேட்டையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் பரிதாப பலி.. திருவண்ணாமலையில் சோகம்..!

சபரிமலைக்கு மாலை போட்ட மாணவர் கருப்பு உடை அணிய தடை.. பள்ளி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு..!

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்தால் நேபாளம் போல் புரட்சி வெடிக்கும்: ஆர்ஜேடி எச்சரிக்கை

மேகதாது அணை சர்ச்சை: உச்ச நீதிமன்ற அனுமதி குறித்த தகவல் தவறு! அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

மேகதாதுவில் அணை கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதியா? தமிழக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments