Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பரபரப்பான சூழ்நிலையில் சென்னையில் பிரஸ் மீட் - மோடியின் திட்டம் என்ன?

Webdunia
புதன், 11 ஏப்ரல் 2018 (17:25 IST)
நாளை சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்து பேசுவார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்துள்ளன. அந்நிலையில், நாளை சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டப்படும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதற்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், பாரதிராஜா தலைமையிலான அமைப்பும் விமான நிலையத்தில் மோடிக்கு கருப்பு கொடி காட்டுவோம் எனக் கூறியுள்ளது.
 
இதன் காரணமாக சென்னையில் திட்டமிட்டிருந்த  மோடியின் பயணத்திட்டத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
இந்நிலையில், நாளை மாலை ஐ.ஐ.டியில் செய்தியாளர் சந்திப்பில் மோடி கலந்து கொள்கிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அந்த சந்திப்பில் கண்டிப்பாக காவிரி விவகாரம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்படும். எனவே, அப்போது அவர் கூறும் பதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் எனத் தெரிகிறது.
 
காவிரி விவகாரம் தொடர்பாக மோடி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில், நாளை அவர் இதுபற்றி என்ன கூறப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 
 
ஆனாலும், தற்போது தகவல் வெளியானாலும், மோடி செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொள்கிறாரா என்பது நாளைக்கே தெரிய வரும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி சிறப்பு மலை சீசன் ரயில் இன்று முதல் தொடக்கம்..!

இனி 5 வயதில் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க முடியாது: வயது வரம்பை உயர்த்தி உத்தரவு..!

பங்குச்சந்தையில் மீண்டும் ஏற்றம்.. சில நாட்களில் சென்செக்ஸ் 80 ஆயிரத்தை நெருங்குமா?

தவெக பொதுக்குழுவில் அறுசுவை உணவு.. 21 வகையான மெனு விவரங்கள்..!

ரம்ஜான் கொண்டாட்டம்; 500 இந்தியர்களை விடுதலை செய்ய அரபு அமீரகம் முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments