Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலகில் கொடூரமானவர்களை வரிசைப்படுத்தினால் இந்துக்களுக்கு முதலிடம்: பா.ரஞ்சித்

உலகில் கொடூரமானவர்களை வரிசைப்படுத்தினால் இந்துக்களுக்கு முதலிடம்: பா.ரஞ்சித்
, புதன், 20 நவம்பர் 2019 (09:28 IST)
இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துவிட்டு அதன்பின்னர் வருத்தம் தெரிவிப்பது, மன்னிப்பு கேட்பது என்பது தற்போது அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்களுக்கு ஒரு வாடிக்கையாகிவிட்டது. சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கமல்ஹாசனும், அசிங்கமான சிலைகள் இருந்தால் அது இந்து கோவில் என்று திருமாவளவனும் கூறியதை அடுத்து தற்போது அவ்வபோது சர்ச்சைக் கருத்துக்களை தெரிவித்து வரும் இயக்குனர் பா.ரஞ்சித் தனது டுவிட்டரில் இந்துக்கள் குறித்து ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
 
உலகில் கொடூரமானவர்களை வரிசைப்படுத்தினால் இந்துக்களை முன்னே நிறுத்தலாம் என்றார் புரட்சியாளர் அம்பேத்கர். "இந்துக்கள்" என்பது ஆங்கிலேயர்கள் காலத்தில் தான் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டது என்ற போதிலும், சாதிகளைக் கொண்ட அதன் திரட்சி நாளுக்கு நாள் மூர்க்கமாகி வருகிறது.
 
திருமாவளவன் அவர்களின் கருத்தை எதிர்கொள்ள முடியாமல் வசவுகளையும், அவதூறுகளையும் செய்து கொண்டிருப்போரை நீலம் பண்பாட்டு மையம் வன்மையாக கண்டிக்கிறது
 
சாதி ஒழிப்பில் பின்தங்கிப் போனது, மக்களை வெறும் வாக்குகளாக மட்டுமே நினைத்தது, பெரியாரை-அண்ணலை கொண்டு சேர்க்காதது.. என்பவற்றால் இன்று வலதுசாரித் தன்மை கொண்ட இரண்டு தலைமுறைகள் வளர்ந்திருக்கிறது. இவர்கள்தான் இன்று உண்மையாக இருப்பதை கூறியதற்கு கண்மூடித்தனமான அவதூறுகளை செய்பவர்கள்’ என்று ரஞ்சித் கூறியுள்ளார்.
 
மேலும் ஒரு கருத்தையொற்றி எதிர்வைக்கப்படும் விமர்சனம் விவாதத்தை ஏற்படுத்த வேண்டும். ஆனால் இங்கு விமர்சனங்களாக வசைகள், தனிமனித தாக்குதல்கள் மற்றும் அவதூறு நிகழ்த்தப்படுவது இவர்களுக்கு பண்பாடாகவே இருக்கிறது. அண்ணன் திருமாவளவன் அவர்களை தரம்தாழ்த்தும் பிற்போக்காளர்கள் எண்ணம் ஒருபோதும்  ஈடேறபோவதில்லை என்றும் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

”சிவசேனா ஆட்சி அமைப்பது உறுதி”..