Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடும்பத்திற்கு ஒரு லட்சம் வரி வசூல்.. என்னை கிடைச்சது? – ப.சிதம்பரம் கேள்வி!

Webdunia
திங்கள், 4 ஏப்ரல் 2022 (09:17 IST)
பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்கள் விலை உயர்ந்து வரும் நிலையில் ஒவ்வொரு குடும்பமும் ஒரு லட்ச ரூபாய் அளவு வரி செலுத்தியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களில் இந்தியாவில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை கிடுகிடுவென விலை உயர்வை சந்தித்துள்ளது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் விலை உயர்ந்து வரும் நிலையில் சுங்க கட்டணம் உள்ளிட்டவையும் உயர்ந்து வருகின்றது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் “கடந்த 8 ஆண்டுகளில் எரிபொருள் வரியாக ரூ.26,51,919 கோடி வசூலித்துள்ளது மத்திய அரசு. இந்தியாவில் சுமார் 26 கோடி குடும்பங்கள் உள்ளன. குடும்பம் ஒன்றிற்கு சராசரியாக ரூ.1 லட்சம் வசூலிக்கபட்டுள்ளது. ஒரு சராசரி குடும்பம் இவ்வளவு தொகையை எரிபொருள் வரியாக செலுத்தியதற்கு ஈடாக என்ன கிடைத்தது என்பதை நீங்களே உங்களை கேட்டுக் கொள்ளுங்கள்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments