Publish Date: Sun, 03 Apr 2022 (12:36 IST)
Updated Date: Sun, 03 Apr 2022 (12:39 IST)
பரமக்குடியில் சசிக்கலா ஆதரவாளர் காருக்கு தீ வைத்த வழக்கில் அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் பரமக்குடியில் அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளராக இருந்தவர் வின்செண்ட் ராஜா. இவர் அங்கு மேலக்காவனூர் பகுதியில் தார் ப்ளாண்ட் ஒன்றையும் நடத்தி வருகிறார். கடந்த ஆண்டில் இவருடன் சசிக்கலா போனில் பேசிய ஆடியோ வெளியான நிலையில் அதிமுக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு வின்செண்ட் ராஜா தனது நிறுவனத்தில் காரை நிறுத்தியிருந்தபோது மர்ம நபர்கள் காருக்கு தீ வைத்துவிட்டு தப்பி சென்றனர். இதுதொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் விசாரணை மேற்கொண்ட போலீஸார் பரமக்குடி காமராஜ் நகர் அதிமுக வார்டு செயலாளர் மணிகண்டன் என்பவரை கைது செய்துள்ளனர். அரசியல் முன்விரோதம் காரணமாக மணிகண்டன் இதை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Prasanth Karthick
Publish Date: Sun, 03 Apr 2022 (12:36 IST)
Updated Date: Sun, 03 Apr 2022 (12:39 IST)