திருவண்ணாமலைக்கு வெளியூர் பக்தர்கள் வரும் 28, 29, 30 ஆகிய மூன்று நாட்களுக்கு வருவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
திருவண்ணாமலையில் ஒவ்வொரு ஆண்டும் தீபத் திருவிழா மிகவும் விசேஷமாக நடக்கும் என்பது தெரிந்ததே. இந்த திருவிழாவை காண்பதற்காக வெளியூர் மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருவது வழக்கம்
இந்த நிலையில் தற்போது திருவண்ணாமலை மாவட்டம் நிவர் புயலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கொரோனா வைரஸ் பாதுகாப்பு காரணங்களாலும் திருவண்ணாமலை தீபத் திருவிழா நடைபெறும் நாட்களான 28 29 30 ஆகிய தேதிகளில் வெளியூர் பக்தர்களுக்கு தடை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு கருதியே இந்த தடை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது