Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நம்மவரை ஒருமையில் பேசினால் பதிலடி! – அமைச்சர்களை கண்டித்து மய்யத்தினர் போஸ்டர்!

Advertiesment
, செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (12:03 IST)
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை அமைச்சர்கள் ஒருமையில் பேசியதாக மய்யத்தினர் ஒட்டியுள்ள கண்டன போஸ்டர்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அமைச்சர்கள் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை ஒருமையில் பேசியதாக கூறி மதுரையில் மக்கள் நீதி மய்யத்தினர் கண்டன போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அதில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை ஒருமையில் பேசுவதை தமிழக அமைச்சர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்ற அர்த்ததில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
webdunia

சமீபத்தில அமைச்சர் செல்லூர் ராஜூ கமல்ஹாசன் நடிப்பில் சக்ரவர்த்தி என்றாலும் அரசியலில் எல்கேஜிதான் என கூறியிருந்த நிலையில் மய்யத்தினர் இவ்வாறு போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமெரிக்காவின் மரணப் பள்ளத்தாக்கில் இதுவரை 'பூமியின் அதிகபட்ச' வெப்பநிலை பதிவு மற்றும் பிற செய்திகள்