Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் - சீமான் கூட்டணியில் இணைகிறாரா ஓபிஎஸ்.. அழுத்தம் கொடுக்கும் நிர்வாகிகள்..!

Mahendran
புதன், 14 மே 2025 (13:23 IST)
விஜய் கட்சி மற்றும் சீமான் கட்சி கூட்டணியே இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், "விஜய்–சீமான் கூட்டணியில் இணைய வேண்டும்" என ஓ.பன்னீர் செல்வம்  தரப்பின் நிர்வாகிகள் அழுத்தம் கொடுப்பதாக கூறப்படுவது, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், அதிமுக–பாஜக கூட்டணி ஒருபுறமும், திமுக கூட்டணி ஒருபுறமும் தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழக வெற்றி கழகம் ஒரு புதிய கூட்டணியை அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக விஜய்யின் தமிழக வெற்றி கழகம், சீமான் தலைமையிலுள்ள நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், அரசியலில் தனித்து விடப்பட்டுள ஓ.பன்னீர் செல்வம் எந்த கூட்டணியில் இணையப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அவரது கட்சியின் நிர்வாகிகள், "திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளில் இணையும் வாய்ப்பு இல்லை. எனவே தனியாக சுயேட்சை சின்னத்தில் போட்டியிட வேண்டிய அவசியமில்லை. அதற்குப் பதிலாக, விஜய் - சீமான்  கூட்டணியில் இணைய வேண்டும்" என்று அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
 
 மேலும், இன்னும் சிலர் பாஜகவிடம் உள் ஒதுக்கீடு பெற்று தேர்தலில் போட்டியிடலாம் என்றும் ஆலோசனை வழங்கி வருகிறார்கள்.
 
விரைவில் இதுகுறித்து ஓ.பன்னீர் செல்வம் ஒரு முடிவை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை பெரும் சேதம்: ஆற்றில் உள்ள சிவன் சிலை மூழ்கும் அளவுக்கு வெள்ளப்பெருக்கு..!

மழையில் நனைந்து கொண்டு செல்போன் பேசலாமா? அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்..

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் வீட்டில் விசேஷம்.. குவியும் வாழ்த்துக்கள்..!

சீதை பிறந்த நகரின் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.887 கோடி. முதல்வர் நிதிஷ்குமார் ஒப்புதல்..!

வீடுதோறும் சென்று மக்களை சந்திக்கும் திட்டம்.. ஈபிஎஸ் வீட்டுக்கும் செல்வாரா முதல்வர்? அவரே கூறிய பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments