மக்களவை தேர்தலில் போட்டியில்லை. பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு.. ஓபிஎஸ் அதிரடி முடிவு

Mahendran
வெள்ளி, 15 மார்ச் 2024 (10:43 IST)
வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை என்றும் பாஜகவுக்கு நிபந்தனை அற்ற ஆதரவு அளிப்பதாகவும் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அதிரடி முடிவு எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
பாஜக அணியில் அதிமுகவில் இருந்து பிரிந்து வந்த ஓபிஎஸ் இணைந்து போட்டியிடுவார் என்றும் அவருக்கு நான்கு தொகுதிகள் வரை கொடுத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. 
இது குறித்த பேச்சு வார்த்தையும் நடந்து வந்த நிலையில் திடீரென ஓபிஎஸ் தற்போது அதிரடி முடிவு எடுத்துள்ளார். இந்த முடிவின்படி மக்களவைத் தேர்தலில் ஓ பன்னீர்செல்வம்  அணி போட்டி இல்லை என்றும் பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க உள்ளதாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது
 
சென்னையில் இன்று நடக்க உள்ள ஆதரவாளர்கள் கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டு அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இரட்டை இலை சின்னத்தில் தேர்தலை சந்திப்போம் என தொடர்ந்து கூறி வந்தாலும், சின்னம் கிடைக்காத நிலை இருப்பதால் தாமரை சின்னத்தில் போட்டியிட பாஜக வலியுறுத்தியதால் அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாட்டர்மெலன் திவாகர்லாம் ஒரு ஆளா? பிக்பாஸையே கழுவிய ஆதிரை! - முதல் எலிமினேஷன் யார்?

தாலிபான்கள் வெளிவிவகார அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு.. காபூலில் மீண்டும் இந்திய தூதரகம்?

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காலில் விழுந்த 74 வயது தி.மு.க. மூத்த எம்.எல்.ஏ: திண்டுக்கல்லில் சர்ச்சை

நிர்வாண போட்டோ அனுப்பு, இல்லையேல் இண்டர்னல் மார்க்கில் கைவைத்துவிடுவேன்: மாணவியை மிரட்டிய பேராசிரியர்..

அடுத்த கட்டுரையில்
Show comments