துணை முதலமைச்சர் ஒரு டம்மி போஸ்ட்.. யாருடன் கூட்டணி.. ஓபிஎஸ் பேட்டி..!

Webdunia
வியாழன், 12 அக்டோபர் 2023 (07:46 IST)
துணை முதலமைச்சர் பதவி என்பது ஒரு டம்மி பதவி என்றும் அந்த பதவிக்கு எந்தவிதமான அதிகாரமும் இல்லை என்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார்.

சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது  ’துணை முதலமைச்சர் பதவி ஒரு டம்மி போஸ்ட் என்றும் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் துணை முதலமைச்சராக இருந்தபோது தனக்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லை என்றும் தெரிவித்தார். துணை முதலமைச்சரால் ஒரு அரசாணையை கூட வெளியிட முடியாது என்றும் அவர் கூறினார்.
 
மேலும் தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளதால் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுப்போம் என்றும் தெரிவித்தார்.  பாஜகவுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் பாஜக தேசிய தலைமை உடன் நட்பில் இருக்கிறோம் என்றும் நட்பின் அடிப்படையில் பேசி வருகிறோம் என்றும் கூட்டணி குறித்து இன்னும் பேசவில்லை என்றும் தெரிவித்தார்.  

மேலும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஆறாம் தேதி கோவையில் மாநாடு நடத்தப்படும் என்றும் அந்த மாநாடு பிரம்மாண்டமாக நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.  மேலும் நாங்கள் தான் அதிமுக என்றும் இரட்டை இலை வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோடையன் ஊரில் மீட்டிங்!.. நம்ம கோட்டைன்னு காட்டணும்!.. நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட பழனிச்சாமி!...

டிட்வா புயல்: சென்னை மாநகராட்சியின் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன?

மனைவியை கொலை செய்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த கணவன்!.. கோவையில் அதிர்ச்சி!....

ஒரு கிலோ மல்லிகைப்பூ 4000 ரூபாய்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

ஆபத்தை உணராமல் மெரினாவில் குறைந்த பொதுமக்கள்.. போலீசார் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments