Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆளுனர் விருந்தை புறக்கணித்த ஈபிஎஸ், ஆதரவாளர்களுடன் கலந்து கொண்ட ஓபிஎஸ்!

Advertiesment
ops eps
, திங்கள், 15 ஆகஸ்ட் 2022 (19:15 IST)
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதை அடுத்து ஆளுநர் நடத்திய தேனீர் விருந்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்பட பலர் கலந்து கொண்டனர்
 
இந்த நிகழ்ச்சியை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி புறக்கணித்த நிலையில் ஓ பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் கலந்துகொண்டார் 
 
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து ஏற்பாடு செய்திருந்தார். இந்த தேநீர் விருந்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்
 
இந்த விருந்தில் கலந்துகொள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் அவர் கலந்துகொள்ளவில்லை என தெரிகிறது 
 
ஆனால் அதே நேரத்தில் தனது ஆதரவாளர்கள் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர்கள் ஓபிஎஸ் இந்த விருந்தில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேசியக்கொடியை ஏற்றி வைத்த விஜய்காந்த்: தொண்டர்கள் கண்ணீர்!