Publish Date: Fri, 29 Jul 2022 (14:47 IST)
Updated Date: Fri, 29 Jul 2022 (14:49 IST)
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் என்றும் மீண்டும் தர்மமே வெல்லும் என பிரதமரை சென்னை விமான நிலையத்தில் வழி அனுப்பிய பின் செய்தியாளர்களிடம் பேசிய ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்தார்.
பிரதமர் தன்னிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார் என்றும் நான் உடல்நலம் நன்றாக இருக்கிறது என்று கூறினேன் என்றும் உடல் நலத்தை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என பிரதமர் தனக்கு அறிவுரை கூறியதாகவும் ஓபிஎஸ் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.
அதிமுக விவகாரம் குறித்து தற்போது நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஓ பன்னீர்செல்வம் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மம் வெல்லும் என்று அவர் தெரிவித்தார். ஒபிஎஸ் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.