டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்.பி. வாழ்த்து தெரிவித்தார்.
திரவுபதி முர்மு கடந்த திங்கட்கிழமை இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராகப் பதவியேற்று, நாட்டின் மிக உயர்ந்த பதவியை வகிக்கும் முதல் பழங்குடியினப் பெண்மணி ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்.பி. சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் இது குறித்து அவர் தனது சமூகவலைத்தளப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, குடியரசு தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்ற மாண்புமிகு இந்திய குடியரசு தலைவர் திருமதி.திரவுபதி முர்மு ஜி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தேன்.
அதோடு, ஆங்கிலேயர்கள் ஆதிக்கத்தை எதிர்த்து போராடிய இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீரமங்கை இராணி வேலுநாச்சியார் அவர்களின் திருவுருவப்படத்தை நினைவு பரிசாக வழங்கினேன் என்று தெரிவித்துள்ளார்.