அமித்ஷா மீது வருத்தம் என்பது உண்மைதான்: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம்..!

Siva
வியாழன், 15 மே 2025 (18:45 IST)
சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தங்களை அழைக்காதது வருத்தமளிப்பதாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
 
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் இன்று   செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
 
"சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எங்களை அழைக்காதது வருத்தமே. நாங்கள் இதுவரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் இருக்கிறோம். யார் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் எங்களது நிலைபாட்டை தெரிவித்துவிட்டோம்.
 
மாவட்டம் வாரியாக ஆய்வு செய்து, தேர்தல் கூட்டணிக் குறித்து விரைவில் அறிவிப்போம். கூட்டணி தொடர்பாக யாருடனும் மறைமுகமாக பேசவில்லை.
 
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் வழங்கப்பட்டது, தற்காலிகமானதே. தவெக தலைவர் விஜய் நல்ல இலக்கை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறார்," என்றார்.
 
முன்னாள் அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எங்களை இணைக்காமல் அதிமுக வெற்றிப் பெற முடியாது” என்று தெரிவித்தார்.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் வி.சேகர் காலமானர்!...

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாதா?!.. பொங்கிய நடிகை ரோஜா!...

வந்தே பாரத், தேஜஸ் ரயில்களில் உணவு கட்டாயமா? பயணிகள் மத்தியில் குழப்பம்!

தாம்பரம் அருகே விமானப்படை பயிற்சி விமானம் விபத்து: விமானிகள் என்ன ஆனார்கள்?

பிகார் தேர்தலில் என்.டி.எ வெற்றிமுகம்.. சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு

அடுத்த கட்டுரையில்
Show comments