கடந்த சில நாட்களில் பாகிஸ்தானுக்கு கிடைத்த ஒரே ஒரு நல்ல செய்தி, இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஓய்வு பெற்றதுதான் என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பாகிஸ்தானை வச்சி செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தியா பாகிஸ்தானுக்குள் சென்று தாக்குதல் நடத்தியது. தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலியாகினர். குறிப்பாக, முக்கிய தீவிரவாதியான மசூத் அசார் குடும்பமே பலியாகியது.
ஆனால் பாகிஸ்தான் தரப்பிலிருந்து வீசப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் அனைத்தும் நடுவானிலேயே அழிக்கப்பட்டதால், பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்தது.
இந்த சூழலில், நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில், "பாகிஸ்தானுக்கு கிடைத்த ஒரே ஒரு நல்ல செய்தி விராட் கோலி ஓய்வு பெற்றதுதான்" என்றும், "விராட் கோலி அணியில் இருந்தால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வெற்றி என்பது வெறும் கனவு தான்" என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.