Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தலைமை செயலகத்தில் யாகம் நடந்தது உண்மையா? ஓபிஎஸ் பரபரப்பு விளக்கம்

Advertiesment
தலைமை செயலகத்தில் யாகம் நடந்தது உண்மையா? ஓபிஎஸ் பரபரப்பு விளக்கம்
, திங்கள், 21 ஜனவரி 2019 (11:57 IST)
சென்னை தலைமை செயலகத்தில் யாகம் நடந்தது என பரவிய செய்திக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கமளித்துள்ளார்.
நேற்று அதிகாலை தலைமை செயலகத்தில் துணை முதல்வர் யாகம் நடத்தியதாக செய்திகள் வெளியானது. மக்கள் வரிப்பணத்தில் கோட்டையில் யாகம் நடத்தலாமா?. பதவிப் பிரமாணத்தை மீறி யாகம் செய்துள்ளார். வீட்டிலோ, கோயிலிலோ யாகம் நடத்தினால் அதனைப்பற்றி கவலையில்லை.
webdunia





















கோட்டையில் யாகம் நடத்த என்ன உரிமை உள்ளது?” என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். மேலும் தாம் முதலமைச்சராகவே பன்னீர்செல்வம் யாகம் நடத்தியதாக குற்றம் சாட்டினார்.
webdunia
இந்நிலையில் இன்று மதுரை விமான நிலைஅயத்தில் செய்தியாளர்களை சந்தித்த  ஓ.பன்னீர் செல்வம், யாகம் நடத்தினால் முதலமைச்சர் ஆகிவிடுவோம் என்றால் எல்லா எம்.எல்.ஏக்களும் யாகம் நடத்துவார்களே? ஏன் ஸ்டாலின் தேவையில்லாமல் பினாத்துகிறார். மூடநம்பிக்கைகளை ஸ்டாலின் நம்புகிறாரா?

தினமும் தலைமை செயலகத்தில் உள்ள என் அறைக்கு சென்றதும் சாமி கும்பிடுவது வழக்கம். ஆனால் யாகம் நடத்தினேன் என பரவிய வதந்தி சுத்த பொய். ஸ்டாலினின் இந்த குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது என ஓ.பி.எஸ் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பப்ஜி கேம் நல்லா ஆடுவீங்களா..! அப்போ நீங்க ஒரு நாளைக்கு ரூ. 2000 சம்பாதிக்கலாம்..!