தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுகவில் வேட்பாளர்களை இறுதி செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் விருப்ப மனுக்களை பெற்ற அதிமுக ஒரே நாளில் வேட்பாளர்கள் நேர்க்காணலை நடத்தி முடித்தது. அதை தொடர்ந்து அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கியமான 6 வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில் மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிப்பதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று அதிமுக அலுவலகத்தில் மகளிர் தின நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் ஓபிஎஸ் மட்டுமே பங்கேற்று கேக் வெட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஈபிஎஸ் பங்கேற்காததால் கட்சிக்குள் உட்பூசல் நிலவி வருகிறதா என்ற ரீதியிலும் பேச்சு அடிபடுகிறது.