Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆளுனர் உரையை துருவி துருவி பாத்தேன்.. ஒன்னுமே இல்ல! – ஓபிஎஸ் வருத்த அறிக்கை!

Advertiesment
Tamilnadu
, திங்கள், 21 ஜூன் 2021 (17:25 IST)
திமுக தேர்தல் வாக்குறுதிகள் ஆட்சிக்கட்டிலில் அமர்வதற்காக அள்ளி வீசப்பட்டவை என எதிர்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் துவங்கியது. இது முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் கூட்டத்தொடராகும். இந்த கூட்டத் தொடரில் ஆளுனர் வாசித்த உரையில் இட ஒதுக்கீட்டை பின்பற்றுதல், 15 நாட்களில் குடும்ப அட்டை போன்ற பல திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஆளுனர் உரை குறித்த தனது கருத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ள எதிர்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் “திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட முக்கியமான திட்டங்கள்,கொள்கைகள் ஆளுநர் உரையில் இடம் பெறாததை பார்க்கையில் வாக்குறுதிகள் எல்லாம் ஆட்சிக்கட்டிலில் அமருவதற்காக அள்ளிவீசப்பட்டவையோ என்ற எண்ணம் மக்களிடையே ஏற்படுகிறது. மொத்தத்தில் இது ஆளுநர் உரையல்ல, உறுதிப்பாடு இல்லாத குழப்பமான உரை” என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தளர்வுகள் 3.0 பாவங்கள்.... இணையதளத்தில் வைரல்