Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எடப்பாடிக்கு எதிராக தர்மயுத்தம் நடத்திய ஓ.பி,எஸ் – ஓ ராஜா மீண்டும் கட்சியில் சேர்ப்பு பின்னணி !

எடப்பாடிக்கு எதிராக தர்மயுத்தம் நடத்திய ஓ.பி,எஸ் – ஓ ராஜா மீண்டும் கட்சியில் சேர்ப்பு பின்னணி !
, செவ்வாய், 25 டிசம்பர் 2018 (07:53 IST)
கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பி.எஸ்.-ன் தம்பி ஓ ராஜா இன்று மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஓ.ராஜா, தேர்தலில் முறைகேடான வழிகளைப் பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளதாக அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர் ஆதாரத்துடன் குற்றம் சாட்டினார்.

இந்தத் தகவல் அதிமுக தலைமையின் காதுக்கு வர,. இதனால் கட்சியின் பெயர் தேவையில்லாமல் பாதிக்கப்படும் என்றும் அதனால் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடிவு  செய்த எடப்பாடி ஓ. ராஜாவை கட்சியில் இருந்து நீக்கும் கடிதத்தை தயார் செய்து கையெழுத்திட்டிருக்கிறார் எடப்பாடி. அதுமட்டுமல்லாமல் கழக ஒருங்கிணைப்பாளரான ஓ.பி,எஸ் – ஸிடமும் அந்தக் கடிதத்தில் கையெழுத்து வாங்கி  அதனை ஊடகங்களுக்கு வெளியிட்டார். அப்போது எதுவும் பேசாமல் அமைதியாக கையெழுத்து போட்டிருக்கிறார் ஓ.பி.எஸ். ஆனால் தனது தம்பியைத் தன்னை வைத்தே கட்சியில் இருந்து நீக்கிய எடப்பாடியின் மீது கடும் அதிருப்தியில் ஓ.பிஎஸ் இருந்திருக்கிறார்.
webdunia

அமைதியாக இருந்த ஓ.பிஎஸ். இப்போது எடப்பாடிக்கு எதிராக தர்மயுத்தத்தை நடத்தி வெற்றி பெற்றுள்ளார். தனது தம்பியின் மீது குற்றச்சாட்டு எழுந்த உடனே நடவடிககை எடுத்த ஈ.பி.எஸ், 8 வழிச் சாலைப் பிரச்சனையின் போது எடபபடியின் மகன் மற்றும் சம்மந்தி பெயர்கள் அடிப்பட்ட போது. அவர்களைக் கட்சியை விட்டு நீக்கினாரா ? அல்லது அவர்கள் மேல் என்ன நடவடிக்கை என்ன நடவடிக்கை எடுத்தார்? என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார். இதனால் அதிர்ந்து போன ஈ.பி.,எஸ் அவரை சமாதானப்படுத்தும் விதமாக தற்போது அவர் தம்பியை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ள அனுமதி அளித்துள்ளார்.
webdunia

ஆகவே, ஓ ராஜாவிடம் தனது தவறை உணர்ந்து இனிமேல் இதுபோல தவறுகளை வருங்காலத்தில் செய்யமாட்டேன் என எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கிக்கொண்டு அவரைக் கட்சியில் இணைத்துக் கொண்டுள்ளதாக  இருவர் கையெழுத்தோடு கடிதம வெளியிட்டுள்ளனர்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிர்வாகிகள் கூட்டம், வேட்பாளர் தேர்வு, தேர்தல் வியூகம் – பரபர ஸ்டாலின் !