Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவில் மீண்டும் சசிக்கலா! தூது செல்லும் ஓபிஎஸ் சகோதரர்! – அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (15:48 IST)
அதிமுகவில் மீண்டும் சசிக்கலாவை இணைக்க வேண்டும் என அதிமுகவினரே கோரிக்கை விடுத்து வரும் நிலையில் ஓபிஎஸ் சகோதாரர் ராஜா நாளை சசிக்கலாவை நேரில் சந்திக்க உள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் பதவி வகித்து வரும் நிலையில், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சசிக்கலாவை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என சிலர் அவ்வபோது கருத்து தெரிவித்து வருகின்றனர்.

உள்ளாட்சி தேர்தல் தோல்விக்கு பிறகு கட்சிக்கு இரட்டை தலைமை தேவையா என்ற கேள்வி கட்சிக்குள்ளேயே ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் தேனி அதிமுக கூட்டத்தில் ஓபிஎஸ் கலந்து கொண்டபோது பலரும் சசிக்கலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என மனு அளித்துள்ளனர். அதை தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏ ஆறுக்குட்டியும் சசிக்கலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் நாளை ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ராஜா, சசிக்கலாவை நேரில் சென்று சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பிற்கு பிறகு சசிக்கலா அதிமுகவில் மீண்டும் இணைவது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்பதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments