அதிசயம் ஆனால் உண்மை: கருணாநிதியை சந்திக்கும் அதிமுக தலைவர்கள்

Webdunia
வியாழன், 26 ஜூலை 2018 (22:11 IST)
திமுக, அதிமுக என்றால் எதிர்க்கட்சிகள் என்பதைவிட எதிரிக்கட்சிகள் என்றே கூறும் அளவுக்கு இரு கட்சியின் மேல்மட்ட தலைவர்களில் இருந்து அடிமட்ட தொண்டர்கள் வரை நடந்து கொண்டனர். ஜெயலலிதா, கருணாநிதி பதவிகளில் இருந்தபோது இருதரப்பினர்களுக்குமான விரோதம் அதிகபட்ச அளவில் இருந்தது. 
 
இந்த நிலையில் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் ஓரளவு இரு கட்சியினர்களும் அரசியல் நாகரீகத்தை கடைபிடித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கருணாநிதியின் உடல்நலம் குறித்த செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் சற்றுமுன் அதிமுக அமைச்சர்கள் கருணாநிதியை சந்தித்து உடல்நலம் விசாரிக்க அவரது கோபாலபுரம் இல்லத்திற்கு சென்றுள்ளனர்.
 
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி ஆகியோர் கோபாலபுரம் சென்று கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரித்தனர்.. இந்த நிகழ்வு ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மொபைலில் சிம் கார்டு இல்லாவிட்டால் வாட்ஸ் அப் இயங்காது.. மத்திய அரசு அதிரடி..!

10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

இன்றும் கனமழைக்கு வாய்ப்பு.. இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்..!

செங்கோடையன் ஊரில் மீட்டிங்!.. நம்ம கோட்டைன்னு காட்டணும்!.. நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட பழனிச்சாமி!...

டிட்வா புயல்: சென்னை மாநகராட்சியின் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments