Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரிகள் திறப்பு; வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Webdunia
வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (17:41 IST)
கல்லூரிகள் திறப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்ரறை ஆண்டுகளாக கல்லூரிகள் செயல்படாமல் இருந்து வருகின்றன. தற்போது கொரோனா குறைந்துள்ள நிலையில் வருகிற செப்டம்பர் 1 முதல் அனைத்து

கல்லூரிகளும் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. மேலும் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இளநிலை இரண்டாம் ஆண்டு, முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும், இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடைபெறும். பொறியியல் படிப்புகளிலும் ஒருநாள் விட்டு ஒருநாள் நேரடி வகுப்புகள் நடத்தலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

கட்டாயம் மாணவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டே கல்லூரிக்கு வரவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அப்படியும் போடாத மாணவர்களுக்கு கல்லூரியிலேயே தடுப்பூசி போட்டுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா சிகிச்சை மையமாக உள்ள கல்லூரிகளில் இணையவழி வகுப்புகளையே பாடங்களை தொடர முடிவெடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

கல்லூரிகள் திறப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

செப்டம்பர் 1 முதல் திறக்கப்படும் கல்லூரிகளில் வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்த வேண்டும். இளநிலை 2 ஆம் ஆண்டி, முதுநிலை , இறுதிநிலை மாணவர்களுக்குத் திங்கல், புதன், வெள்ளிக்கிழமையில்  வகுப்புகள் நடத்த வேண்டும் எனவும், இளநிலை இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் எனவும், பொறியியல் படிக்கும் மாணவர்காளுக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் வகுப்புகள் நடத்தலாம் எனத் தெரிவித்துள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments