Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோடையில் குதூகளிக்க உகந்த இடம் ஊட்டி!- சினோஜ் கட்டுரைகள்

Advertiesment
ooty
, புதன், 12 ஏப்ரல் 2023 (21:39 IST)
தமிழ்நாட்டிலுள்ள முக்கிய சுற்றுலாத்தளம் ஊட்டி என்ற பகுதியாகும். மலைகளின் அரசியென்று அழைக்கப்படும் ஊட்டி  நீலகிரி மாவட்டத்தில் ஒரு நரகம் ஆகும்.  ஊட்டி கோவை மாவட்டத்தில் இருந்து 86 கிமீ தொலையில் அமைந்துள்ளது. திருப்பூரில் இருந்து 128 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

இந்த ஊட்டிப்பகுதி அங்குள்ள பழங்குடியினர் வசமிருந்த இருந்த நிலையில், கடந்த 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில், இந்தியாவுக்கு வணிகம் மேகோள்ள வந்த ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியினர் கைப்பற்றினர்.

இந்த ஊட்டி, கடல் மட்டத்திலிருந்து 2,240 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது

இந்தியாவில் உள்ள மக்கள் ஒரு   நாளாவதும் ஊட்டி செல்ல வெண்டுமென்பதை  லட்சியமாகக் கொண்டிருப்பர். அப்படிப்பட்ட இயற்கை எழில் சூழ்ந்த குளிர்ச்சியான பகுதியாகும் இது.

தமிழ் நாட்டிலுள்ள எப்போதும் குளிர்ச்சியான பகுதியாக விளங்குவதால், எப்போது, இங்கு சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை கணிசமான அளவில் உள்ளது.

இந்த ஊட்டியில்,  விஜய நகரத்தில் அமைந்துள்ள நூற்றாண்டு பூங்கா என்றழைக்கப்படும் ரோஜா பூங்கா பிரசித்தி பெற்றதாகும். இங்கு இங்கு, தேயிலை ரோஜாக்கள், மினியேச்சர் ரோஜாக்கள் உள்ளிட்ட 20,000க்கும்  மேற்பட்ட ரோஜாக்கள் உள்ளன.

அதேபோல்,1847 ஆம் ஆண்டு  22 ஏக்கர்  பரப்பளவில் அமைக்கப்பட்டு, தமிழக அரசால் பராமரிக்கப்படும்  உள்ள  ஊட்டி தாவரவியல் பூங்கா.

ஊட்டி  ஏரியின் ஓரத்தில் அமைந்துள்ள மான் பூங்கா.   மூர்த்தி சிகரத்தில் இருந்து உற்பத்தியாகும் பைகார அணை, பைகாரா  நீர்வீழ்ச்சி, படகு இல்லம், காமராஜ் சாகர் அணை, பிக்னிக் ஸ்பாட், மற்றும் வென்லாக் டவுன்ஸின் சரிவு என்ற சினிமா ஷூட்டிங் எடுக்கும் இடம், பார்சன்ஸ் பள்ளத்தாக்கு நீர்த்தேக்கம், எமரால்ட் ஏரி, அவலாஞ்சி ஏரி மற்றும் போர்த்திமண்ட் ஏரி, பழங்குடியின மக்களின் பீப்பாய் வால்ட் குடிசைகள், பங்களா ஸ்டோன் ஸவுஸ், கல் பங்களா, மைசூர் செல்லும் சாலையிலுள்ள செயின்ட் ஸ்டீபன் தேவாலயம், செயின்ட் தாமஸ் தேவாலயம், முதுமலை தேசிய பூங்கா, புலிகள் காப்பகம், சிம்ஸ் பூங்கா, ப்ளூ மவுண்ட்ஸ் பள்ளி ஆகியவை பிரசித்து பெற்றதாகும்.

இங்கு, மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் காய்கரி விளைச்சல் மற்றும் தேயிலை தோட்டத் தொழில் ஆகியவை உள்ளன.

ஊட்டிக்கு கார், பேருந்து, இருசக்கர வாகனங்கள், மகிழுந்துகளின்  மூலம் மக்கள் தினமும் சுற்றுலா சென்று வருகின்றனர்.

கடந்த 1908 ஆம் ஆண்டு  முதல் நீலகிரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இது ஒரு ஆங்கிலேயர்களால் வடிவமைக்கப்பட்ட நீராவி எஞ்ஜினாகும்.

இந்தக் கோடையில் ஊட்டியில் உங்கள் சுற்றுலாவை மேற்கொண்டு மகிழ வாழ்த்துகள்.

#சினோஜ்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஷிய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை- கனடா அறிவிப்பு