இந்தியா - பாகிஸ்தான் போர் விவகாரத்தில் பெரும்பாலான நாடுகள் தங்களுக்கு ஆதரவாக உள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் க்வாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடந்து வரும் நிலையில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழித்துள்ள இந்திய ராணுவம், பாகிஸ்தானின் தாக்குதல்களையும் தடுத்து வருகிறது. இந்நிலையில் இந்த போர் விவகாரத்தில் இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் உலக நாடுகளின் ஆதரவை பெற்று வருகின்றன.
இந்தியாவிற்கு ஏற்கனவே இஸ்ரேல் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் நட்பு நாடுகளாக உள்ள அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் இந்தியா தரப்புக்கு ஆதரவும், அதேசமயம் போர் நிறுத்தம், பேச்சுவார்த்தைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் பேசி வருகின்றன.
இந்நிலையில் பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பேசிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிஃப் தங்களுக்கு சீனா, துருக்கி, அஜர்பைஜான் உள்ளிட்ட பல நாடுகள் ஆதரவளித்துள்ளதாகவும், மேலும் ஈரான், அரபு அமீரகம், சீனா, கத்தார் உள்ளிட்ட நாடுகளும் தொடர்ந்து பேசி வருவதாகவும் கூறியுள்ளார். இந்தியாவிற்கு இஸ்ரேலை தவிர எந்த நாடும் ஆதரவாக இல்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
ஆனால் பாகிஸ்தான் அமைச்சர் குறிப்பிட்ட எந்த நாடுகளும் இதுவரை தங்களது தார்மீக ஆதரவு குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Edit by Prasanth.K