பாகிஸ்தானுடன் போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை சில முக்கிய ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பை குறைக்கும் தகவல்களை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டும், பொறுப்புடன் இணையத்தை அனைவரும் பயன்படுத்த வேண்டுமென்றும் அரசு தெரிவிக்கிறது.
போர் நேரத்தில் என்ன செய்யலாம்?
அதிகாரப்பூர்வ தகவல்கள் மற்றும் உதவி எண்களை மட்டுமே பகிரவும்.
எந்த செய்தியையும் பகிர்வதற்கு முன் அதன் உண்மைத்தன்மையை உறுதி செய்யுங்கள்.
ஏதேனும் தவறான தகவல் தெரிய வந்தால், அதனை அதிகாரப்பூர்வமாய் புகாரளிக்கலாம்.
சைபர் பாதுகாப்பு தொடர்பான எச்சரிக்கைகளை கவனமாக பின்பற்ற வேண்டும்.
போர் நேரத்தில் என்ன செய்யக்கூடாது?
இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகள், இடம் மற்றும் திட்டங்களை இணையத்தில் பகிரக்கூடாது.
உறுதி செய்யப்படாத செய்திகளை மற்றவர்களுடன் பகிர வேண்டாம்.
சமூக இடைவெளி ஏற்படுத்தும் விதமாக மத, சமூகம், அல்லது வன்முறை தூண்டும் பதிவுகளை தவிர்க்க வேண்டும்.
இவற்றை கடைபிடிப்பதன் மூலம் நாம் பொறுப்பான குடிமகனாக நமது நாட்டின் பாதுகாப்பில் ஒரு பங்காக இருக்க முடியும். இணையம் ஒரு சக்திவாய்ந்த கருவி அதை சரியான முறையில் பயன்படுத்துவோம். இவ்வாறு மத்திய அரசு நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.