Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆன்லைன் ரம்மியும் குதிரைப்பந்தயமும் ஒன்றா? சென்னை ஐகோர்ட்டில் பரபரப்பான வாதம்

ஆன்லைன் ரம்மியும் குதிரைப்பந்தயமும் ஒன்றா? சென்னை ஐகோர்ட்டில் பரபரப்பான வாதம்
, செவ்வாய், 22 டிசம்பர் 2020 (07:22 IST)
சமீபத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தமிழக அரசு தடை செய்த நிலையில் இந்த தடையை எதிர்த்து ஆன்லைன் ரம்மி விளையாட்டு தனியார் நிறுவனங்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கூறியபோது, ‘குதிரைப்பந்தயம் உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டு விவகாரங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்கு ஏற்கனவே முன்னுதாரணமாக பல வழக்குகள் உள்ளன. எனவே இந்த வழக்கின் விசாரணை முடியும் வரை ஆன்லைன் ரம்மி அவசர சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று வாதாடினார் 
 
ஆனால் அரசு தரப்பு வழக்கறிஞராக அப்போது குறுக்கிட்டு ’ஆன்லைன் ரம்மி விளையாட்டு என்பது பெற்றோர்களின் கிரெடிட் கார்டுகளை பிள்ளைகள் பயன்படுத்தி பெரும் தொகை இழக்கின்றனர். அது மட்டுமின்றி ஏராளமான உயிரிழப்பு சம்பவங்களும் நடந்துள்ளன. எனவேதான் ஆன்லைன் விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ளது என்று வாதாடினார் 
 
இந்த வழக்கில் கருத்து தெரிவித்த நீதிபதிகள் ’உட்கார்ந்த இடத்திலேயே ஆன்லைன் ரம்மி விளையாட்டு விளையாடுவதையும் குதிரை பந்தயத்தில் கலந்து கொள்வதையும் ஒன்றாக கருத முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள் இந்த அவசர சட்டத்தை எதிர்த்த மனுவுக்கு பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு அவகாசம் வழங்கினர். மேலும் இந்த வழக்கை ஜனவரி 18ஆம் தேதி நடைபெறும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேர்தல் நெருங்கும் வேளையில் திடீரென கவர்னரை சந்திக்கும் முக ஸ்டாலின்: என்ன காரணம்?