ஆன்லைன் சூதாட்ட மசோதா திருப்பி அனுப்பியதற்கான காரணத்தை கவர்னர் வெளியிட வேண்டும் என்றும் அந்த காரணத்தை மக்கள் தெரிந்து கொள்ளட்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் கடந்த அக்டோபர் மாதம் இயற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் ரவி நேற்று திருப்பி அனுப்பினார். இந்த விவகாரம் குறித்து இன்றைய தமிழக அமைச்சரவை ஆலோசனை செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டம் மசோதாவை கவர்னர் ரவி திருப்பி அனுப்பியது குறித்து கருத்து கூறிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதற்கு காரணத்தை வெளியிட வேண்டும் என்றும் காரணத்தை வெளியிட்ட பின் மக்களை முடிவு செய்யட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
யாரையோ சமாதானம் செய்வதற்காக தவறான சட்டத்தை கொண்டு வந்து ஆளுநரிடம் கையெழுத்திட நிர்பந்திக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.