Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டால் 6 மாதம் சிறை- புதிய மசோதா தாக்கல்!

Advertiesment
ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டால் 6 மாதம் சிறை- புதிய மசோதா தாக்கல்!
, வியாழன், 4 பிப்ரவரி 2021 (15:40 IST)
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் ஆன்லைன் சூதாட்ட மோகம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பலர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து விரக்தியில் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட செயலிகள், வலைதளங்களை தடை செய்ய வேண்டும் என தொடர் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் விதமாக நவம்பர் மாதம் 20 ஆம் தேதி சட்டமன்றத்தில் சட்டமியற்றப்பட்டது. அதையடுத்து இன்று கூடிய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அந்த தடை மசோதாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்தார். இந்த தடையை மீறி சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு  ரூ.5,000 அபராதம், 6 மாத சிறை தண்டனை வழங்கவும், சூதாட்டத்தை நடத்துபவர்களுக்கு ரூ.10,000 அபராதமும் 2 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்படும் எனவும் சட்டத்திருத்த மசோதாவில் சொல்லப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓ பொம்மலாட்டம் இப்படிதான் இருக்குமா? – இந்திய கிரிக்கெட் வீரர்களை கலாய்த்த மனோஜ் திவாரி!