Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேசன் கார்டில் முகவரியை மாற்ற ஆன்லைனில் வசதி!

Webdunia
புதன், 10 பிப்ரவரி 2021 (07:32 IST)
ரேஷன் கார்டில் இனி முகவரியை மாற்றுவதற்கு ரேஷன் கடைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஆன்லைனிலேயே மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதன் மூலம் ஒரு சில நிமிடங்களில் ஆன்லைன் மூலம் புதிய முகவரியை மாற்றிக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டில் முகவரியை எப்படி மாற்றலாம் என்பது குறித்து தற்போது பார்ப்போம்
 
முதலில்  www.pdsportal.nic.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். இந்த இணையதளத்தில் ஹோம் பக்கத்தில் மேல் இடது பக்கத்தில் உள்ள மாநில அரசு இணையதளங்கள் என்பதை கிளிக் செய்தால் மாநில பட்டியல் வரும். அதில் நாம் எந்த மாநிலத்தில் இருக்கின்றோமோ, அந்த மாநிலத்தை தேர்வு செய்ய வேண்டும்.
 
அதன்பின்னர் ஓப்பன் ஆகும் மற்றொரு பக்கத்தில் ரேஷன் கார்டு முகவரி மாற்ற படிவம் அல்லது ரேஷன் கார்டு படிவத்தில் மாற்றம் தொடர்பான பொருத்தமான லிங்கை தேர்வு செய்ய வேண்டும். இதில் யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பதிவு செய்து உள்ளே நுழைந்து புதிய முகவரி குறித்த விபரங்களை நிரப்பி, பின்னர் ஓகே செய்ய வேண்டும். தேவைப்பட்டால் அந்த பக்கத்தை பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளலாம். இவ்வாறு இனிமேல் ஆன்லைனில் ஒருசில நிமிடங்களில் ரேசன் கார்டில் முகவரி மாற்றி கொள்ளலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்கம் விலை இன்று மீண்டும் குறைவு.. ஒரு சவரன் ரூ.72,000க்கும் குறையுமா?

தனியார் மருத்துவாம்னையில் மருத்துவ மாணவியின் பிணம்.. கோவையில் பரபரப்பு..!

வனபத்ரகாளியை வேண்டி அதிமுக எழுச்சிப் பயணத்தை தொடங்கிய எடப்பாடியார்!

சென்னைக்கு மிக அருகில்.. ஏமாற்று விளம்பரம் செய்தால் நடவடிக்கை..TNRERA எச்சரிக்கை..!

ஏழை மாணவர்கள் தங்குவதற்காக இனி ‘சமூகநீதி விடுதிகள்’ - முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments