போலி திராவிடத்தை விரட்டியடித்து ஆன்மீக அரசியலை மீட்டெடுப்போம்: பிக்பாஸ் நடிகை

Webdunia
புதன், 10 பிப்ரவரி 2021 (07:20 IST)
போலி திராவிடத்தை விரட்டியடித்து உண்மையான ஆன்மீக அரசியலை மீட்டெடுப்போம் என பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையும் பாஜக பிரமுகருமான காயத்ரி ரகுராம் தனது டுவிட்டரில் பதிவு செய்து உள்ளார்.
 
நடிகை காயத்ரி ரகுராம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாஜகவை சேர்ந்த பின்னர் இந்துக்களுக்கு ஆதரவாகவும் திராவிட கட்சிகள் எதிராகவும் தனது டுவிட்டரில் கருத்துகளை பதிவு செய்து வருகிறார் என்பது தெரிந்ததே.
 
அந்த வகையில் தற்போது அவர் போலி திராவிடத்தை விரட்டி அடிப்போம் என்றும் உண்மையான ஆன்மீக அரசியல் மீட்டெடுப்போம் என்றும் கூறி ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார். அந்த டுவிட்டில் அவர் கூறியிருப்பதாவது:
 
அய்யா வைகுண்டர் உருவாக்கிய துவையல் பந்தியை  சமபந்தியாகவும், முந்திரி குடியிருப்பை சமத்துவபுரமாகவும், முந்திரி கிணற்றை பொது கிணறு எனவும் பெயரை மாற்றி அய்யா வைகுண்டர் ஏற்படுத்திய  சாதி சமயமற்ற சமூக புரட்சியை திராவிட தலைவர்கள் கொண்டு வந்த சமூக புரட்சி என வரலாற்றை மறைத்தும் திரித்தும் பேசும்  போலி திராவிடத்தை விரட்டியடித்து உண்மையான ஆன்மீக அரசியலை  மீட்டெடுப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ChatGPTல் 18+ கதைகளையும் இனி கேட்கலாம்: சாம் ஆல்ட்மேன் தகவல்..!

குழந்தைகளின் நலனுக்காக சேர்ந்து வாழுங்கள்: பிரிந்து வாழும் தம்பதிக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை..!

20 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க பாஸ்போர்ட் மதிப்பு குறைவு.. டாப் 10 பட்டியலில் இருந்து வெளியேற்றம்..

கரூர் சம்பவம்.. வேகமாக பிரேத பரிசோதனை செய்தது ஏன்? அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கம்..!

கரூர் சம்பவத்தில் அரசு மீது மக்களுக்கு சந்தேகம் உள்ளது.: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments