Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றும் தமிழக மீனவர்கள் 10 பேர் கைது.. இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியம்..!

Siva
திங்கள், 3 பிப்ரவரி 2025 (07:49 IST)
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்கதை ஆகி வரும் நிலையில், இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஏற்கனவே பலமுறை மீனவர் சங்கங்கள் மத்திய மற்றும் மாநில அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளன. ஆனால், மீனவர்கள் கைது செய்யப்படும் நிலை மட்டும் தொடர்கதை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இன்றும் தமிழகத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று, ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் துறை அலுவலகத்தில் அனுமதி சீட்டு பெற்று கடலுக்குள் சென்று, கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டியதாக கூறி தமிழக மீனவர்கள் 10 பேரை கைது செய்தனர்.

அது மட்டும் இன்றி, அவர்கள் சென்ற விசைப்படகையும் சிறை பிடித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் தமிழகத்தைச் சேர்ந்த 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த நிலையில், தற்போது மீண்டும் 10 மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு வருகிறது. மேலும், இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. காவல்துறையினர் சோதனை..!

காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல: ரத்தத்தை கொடுத்து உயிர் காப்பவர்கள்: மெஹபூபா முஃப்தி

இன்று இரவு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

காஷ்மீர் தாக்குதல் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது!" திருமாவளவன்

பயங்கரவாதிகளுக்கு நாங்கள் பயிற்சி அளித்தது உண்மைதான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments