Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடக்க முடியாமல்.... சுற்றி நடப்பதை உணர முடியாமல்.. என்ன ஆச்சு விஜயகாந்துக்கு?

Advertiesment
நடக்க முடியாமல்.... சுற்றி நடப்பதை உணர முடியாமல்.. என்ன ஆச்சு விஜயகாந்துக்கு?
, திங்கள், 20 ஆகஸ்ட் 2018 (15:55 IST)
அமெரிக்க சென்று சிகிச்சை பெற்று சென்னை திரும்பியுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை தேமுதிக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக கடந்த ஜூலை மாதம் அமெரிக்கா புறப்பட்டு சென்றார். இதனால் அவரால் கலைஞரின் இறுதி அஞ்சலி நிகழ்சியில் நேரில் பங்கேற்க முடியவில்லை. அதனால் கலைஞரின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஒரு வீடியோவை வெளியிட்டார். 
 
அதில் கலைஞர் இறந்த செய்தியை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரின் இறுதி அஞ்சலியில் பங்கேற்க முடியாதது எனக்கு வருத்தமளிக்கிறது. அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.  நான் அமெரிக்கா வந்திருந்தாலும் என் நினைவுகள், எண்ணம் அனைத்தும் கருணாநிதியின் மேலேயே இருக்கிறது. என்னை விஜி விஜி என பாசமாக அழைப்பார். அவரின் மறைவை என்னால் தாங்க முடியவில்லை எனக் கூறி அதற்கு மேல் பேச முடியாமல் அவர் கதறி அழுதார். அந்த வீடியோவானது பார்ப்பவர்களின் நெஞ்சை உலுக்கும் விதமாக இருந்தது. 
 
இந்நிலையில் அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து இன்று அதிகாலை 3 மணியளவில் சென்னை திரும்பிய விஜயகாந்த், மனைவி பிரேமலதா மற்றும் மைத்துனர் சதீஷுடன் மெரினாவுக்கு சென்று கருணாநிதியின் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
 
அப்போது அவரால் நடக்க முடியவில்லை. அவரை சதீஷும், பிரேமலதாவும் கை தாங்கலாக பிடித்து அழைத்து சென்றனர். அப்போது ஒரு இடத்தில் நின்றுவிட்ட விஜயகாந்த் எதையும் உணர முடியாதவர் போல் காணப்பட்டார். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
 
சிகிச்சைக்கு சென்ற விஜயகாந்த் நல்ல உடல் நலத்தோடு திரும்பி வருவார் என தேமுதிக தொண்டர்கள் காத்திருந்தனர். ஆனால், அவரின் உடல்நிலையை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கேப்டன் விஜயகாந்தை இப்படி பார்ப்பது வருத்தமளிக்கிறது என பலரும் சமூக வலைத்தளங்களில் வேதனையுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அனைத்தும் இலவசமா? ஜியோ ஃபைபர் பிரீவியூ சலுகை!