Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் கொரோனா பாதிப்பிற்கு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பலி: அதிர்ச்சி தகவல்

Webdunia
புதன், 1 ஜூலை 2020 (07:52 IST)
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாகி வருவதால் சென்னையை விட்டு பலர் சொந்த ஊருக்குத் திரும்பி விட்டார்கள் என்பது குறித்த செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம் 
 
தற்போது தமிழகத்தில் மொத்தம் 90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் அதில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சென்னையில் உள்ளவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் கொரோனாவால் 1200க்கும் அதிகமானோர் மரணம் அடைந்து உள்ளார்கள் என்பதும் இதில் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 800க்கும் அதிகமானோர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சென்னையில் பாமர மக்கள் மட்டுமின்றி உயர் பதவியிலிருக்கும் சிலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் மாம்பலம் காவல்துறை ஆய்வாளர் பாலமுரளி உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒரு காவல் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கொரோனாவால் பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
சென்னை பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் இன்று கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இவருக்கு வயது 57. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று காலை திடீரென அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதனையடுத்து சென்னை காவல் துறையில் கொரோனாவால் இரண்டாவது பலியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை மாம்பலம் காவல் ஆய்வாளர் பாலமுரளி அவர்கள் கொரோனாவால் உயிரிழந்த அதிர்ச்சியில் இருந்தே காவல்துறையினர் இன்னும் மீளாத நிலையில் தற்போது மேலும் ஒரு காவல்துறை அதிகாரி கொரோனாவால் பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments